இது சாதாரணமானது அல்ல.. சிஎஸ்கே அணியின் செயல்பாடு.. முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரிக்கை!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ச்சி சாதாரணமாக தெரியவில்லை என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அணி நேற்று தனது 3வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மொயின் அலிக்கு சிஎஸ்கே தலைமையே பாராட்டு.. சிக்கலில் சீனியர் வீரர்.. இனி வாய்ப்பு அவ்ளோதான்!

இந்த போட்டியில் பேட்டிங் பலம், சுழற்பந்துவீச்சு என பழைய சிஎஸ்கே அணியை போன்றே கம்பேக் கொடுத்ததாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே மீது விமர்சனம்

சிஎஸ்கே மீது விமர்சனம்

தோனி தலைமையிலான சென்னை அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடியது. 12 புள்ளிகளை மட்டுமே பெற்று ப்ளே ஆப்-க்குள் கூட செல்ல முடியாமல் வெளியேறியது. இதனால் தோனி மீதும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

 கம்பேக் கொடுத்தது

கம்பேக் கொடுத்தது

ஆனால் தற்போது சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், அடுத்த 2 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணியை அசால்ட்டாக வென்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2வது இடம்

2வது இடம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், சிஎஸ்கே அணிக்கு கடந்தாண்டு சரியாக அமையவில்லை. எனினும் இந்தாண்டு இந்தியாவில் சிறப்பாக ஆடுகிறது. இதனால் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணியுடன் முதல் இடத்தில் ஆர்சிபி, 3வது மும்பை மற்றும் 4வது இடத்தில் டெல்லி அணி உள்ளது.

வாகன் எச்சரிக்கை

வாகன் எச்சரிக்கை

சென்னை அணியின் இந்த கம்பேக் மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4ல் மீதமுள்ள 3 அணிகளில் நான் இருந்திருந்தால் இதனை தான் நினைத்திருப்பேன். எனவே மற்ற அணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வலுவான அணி

வலுவான அணி

சிஎஸ்கே அணியில் கடந்தாண்டு பேட்டிங் செயல்பாடு சிறப்பாக இல்லை. பந்தை தின்றுவிட்டு எந்த வீரரும் ரன் எடுக்காமல் சென்றனர். ஆனால் இந்த முறை ரெய்னாவின் கம்பேக், மொயின் அலி வருகை அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்த்துள்ளது. அதே போல சென்னை அணியின் பலமாக பார்க்கப்படும் சுழற்பந்துவீச்சு நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. எனவே சிஎஸ்கே கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Michael Vaughan Pointsout CSK's warning to other teams after their victory against RR
Story first published: Tuesday, April 20, 2021, 14:57 [IST]
Other articles published on Apr 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X