For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிவில்லியர்ஸுன் MR.360 டிகிரி பட்டத்திற்கு போட்டி போடும் புது வீரர்...பங்கிட்ட கவாஸ்கர்.. யார் அவர்?

சென்னை: ஆர்சிபி அணியில் இரண்டு 360 டிகிரி ப்ளேயர்கள் இருப்பதால் எதிரணி பவுலர்கள் திணறுவார்கள் என முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அசுர பலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.

அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் வருகை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் வீரர் கவாஸ்கர் அது குறித்து பேசியுள்ளார்.

முதலிடம்

முதலிடம்

கடந்த ஆண்டு ப்ளே ஆப் வரை சென்று இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாமல் போன பெங்களூரு அணி இந்தாண்டு தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக அந்த அணியின் பேட்டிங் வரிசையில் மேக்ஸ்வெல்லின் பங்கு முக்கியமானதாக உள்ளது.

 முக்கிய வீரர்

முக்கிய வீரர்

கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடிய அவர் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனால் இந்தாண்டு இதுவரை 3 இன்னிஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர் 39, 59, 78 என அடித்து அந்த ஸ்கோரை முந்தியுள்ளார். தொடக்கத்தில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளதால், இவர் எந்தவித பிரஷரும் இன்றி சிறப்பாக ஆட முடிவதாக கூறப்படுகிறது.

 க்ளென் மேக்ஸ்வெல்

க்ளென் மேக்ஸ்வெல்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், மேக்ஸ்வெல்லை சிறப்பான ஃபார்மில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இருப்பதால் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸுக்கு பிரஷர் குறைகிறது. கடந்த முறை தேவ்தத் பட்டிக்கல் சிறப்பாக ஆடி ஆட்டத்தின் தொடக்கம் முதலே ரன் சேர்த்தார். இந்த முறை அந்த பணியை மேக்ஸ்வெல் செய்து வருகிறார் எனத்தெரிவித்துள்ளார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இதனால் ஆர்சிபி அணிக்கு இரண்டாவது 360 டிகிரி ப்ளேயர் கிடைத்துள்ளார் என்று கூறலாம். அவர் ரிவர்ஸ் ஷாட்டை சிறப்பாக ஆடுகிறார் என்பதை வைத்து நான் இதை கூறவில்லை. வலதுகை வீரரான மேக்ஸ்வெல் பந்தை லெக் சைட் திசையில் அடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ஆஃப் சைட்டில அடிப்பது மிகவும் கடினம். அதனை மேக்ஸ்வெல் சிறப்பாக செய்கிறார். இரண்டு 360 டிகிரி வீரர்கள் இருக்கும் போது பவுலர்கள் என்னதான் செய்வார்கள், எதிரணி நினைத்ததை விட அதிக ரன்கள் வரும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, April 24, 2021, 20:41 [IST]
Other articles published on Apr 24, 2021
English summary
Sunil Gavaskar Praises Glenn Maxwell's impact for RCB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X