For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு ஷாட்டா? அனைவரையும் வாய்ப்பிளக்க செய்த அந்த ஒரு சிக்ஸர்.ரகசியத்தை கூறிய சூர்யகுமார் யாதவ்

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அடித்த ஒரு ஷாட் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணியின் புதிய திட்டம்..முக்கிய வீரரால் ஐதராபாத் அணிக்கு சிக்கல்..இன்றைய போட்டியின் வியூகம் ஆர்சிபி அணியின் புதிய திட்டம்..முக்கிய வீரரால் ஐதராபாத் அணிக்கு சிக்கல்..இன்றைய போட்டியின் வியூகம்

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரோகித் - சூர்யகுமார் யாதவ் ஜோடி 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்ததே ரன்கள் உயர்ந்ததற்கு காரணமாய் அமைந்தது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடி காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அரை சதம்

அரை சதம்

மும்பை அணி சரிவில் இருந்த போதும் அவர் தயக்கமின்றி ஆடி 36 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்நிலையில் அவர் அடித்த ஒரு சிக்ஸர் இணையவாசிகளிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

வியக்கவைக்கும் சிக்ஸர்

வியக்கவைக்கும் சிக்ஸர்

ஆட்டத்தின் 10வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். அப்போது சூர்யகுமார் யாதவ் 44 ரன்களுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார். அதில் அவர் 5வதாக போட்ட பந்து யார்க்கர் லெந்த்-ல் அமைய சூர்யகுமார் யாதவ் அதனை ஃபிள்ப் ஷாட் மூலம் 99 மீ சிக்ஸர் அடித்தார். இதனை பார்த்த அனைவருக்கும் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த சக வீரர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

ரகசியம்

இந்நிலையில் இந்த ஷாட் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். அப்போது, நான் சிறு வயதில் இருக்கும் போது அதிகளவில் ரப்பர் பந்துகளில் கிரிக்கெட் விளையாடுவேன். அந்த போட்டி சிமெண்ட் பிட்ச்களில் நடைபெறும். அவற்றில் ஒரு புறம் மட்டும் அதிகப்படியான தூரத்தில் 90 -95 மீ பவுண்டரி லைன்கள் இருக்கும். எனவே அப்போது விளையாடி பழகியது இன்று அந்த ஷாட்களுக்கு உதவியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

சூர்ய குமார் யாதவின் இந்த ஷாட் பெரியளவில் பாராட்டை பெற்று வருகிறது. குறிப்பாக ஆட்டத்தை வெளியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஹர்த்திக் பாண்டியா ஆச்சரியத்துடன் எழுந்து நின்று கைத்தட்டினார். இதே போல் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் பாராட்டி தள்ளியுள்ளனர். இந்த ஷாட் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக, நெட்டிசன்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, April 14, 2021, 16:28 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
Suryakumar Yadav Reveals how he developed his majestic flick for a six against KKR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X