டேபிள் டாப்பர்.. அதிக ரன் ரேட்.. ஒருவேளை ஐபிஎல் 2021 மொத்தமாக கைவிடப்பட்டால்.. வின்னர் யார்?

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் ஒருவேளை கைவிடப்பட்டால் இந்த தொடரின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2021 ஐபிஎல் தொடர் எதிர்பார்க்கப்பட்டபடியே நிறுத்தப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் தற்காலிகமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

என்னங்க இப்படி சொல்றீங்க?.. பிசிசிஐ கொடுத்த மறைமுக சிக்னல்.. அப்போது ஐபிஎல் 2021 நடக்கவே நடக்காதா?

இனி போட்டிகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. போட்டிகள் நடக்குமா? இல்லை கைவிடப்படுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஏன்

ஏன்

இந்தியாவில் இனி கொரோனா குறைந்து, இப்போது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்லும் வீரர்கள் மீண்டும் இந்தியா வந்து, தனிமைப்படுத்தி, ஐபிஎல் ஆடுவது எல்லாம் இயலாத காரியம். அதோடு இந்த காலண்டர் இயரில் வேறு சில தொடர்கள் இருப்பதால் ஐபிஎல் நடப்பதே சந்தேகம் ஆகியுள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ள 2021 ஐபிஎல் தொடர் ஒருவேளை கைவிடப்பட்டால் இந்த தொடரின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் வின்னர் தேர்வு செய்யப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

யார் டாப்

யார் டாப்

தற்போது உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் டெல்லி அணி 8ல் 6 போட்டிகளில் வென்று டேபிள் டாப்பராக உள்ளது. சிஎஸ்கே அணி 7ல் 5 போட்டியில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. +1.263 ரன் ரேட் கொண்டு டெல்லியை விட சென்னைதான் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

டெல்லி ரன் ரேட்

டெல்லி ரன் ரேட்

டெல்லி அணியின் ரன் ரேட் +0.547 மட்டுமே. இதனால் தற்போது இந்த புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி அணி தேர்வு செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ஐபிஎல் 2021 ஒருவேளை கைவிடப்பட்டால் வின்னர் அறிவிக்கப்பட மாட்டார்கள்.

வெற்றி

வெற்றி

யாரும் சாம்பியன்ஸ் என்று அறிவிக்கப்பட மாட்டார்கள். மொத்தமாக தொடர் கைவிடப்படும். யாருக்கும் பரிசுகள் கிடைக்காது. 2021 ஐபிஎல் தொடரில் வெற்றியாளர் என்று எந்த அணியும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த வருட சீசன் கண்டிப்பாக நடக்க வாய்ப்பு குறைவுதான் என்று கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021 suspended: Who will be the winner if the whole season dismissed?
Story first published: Tuesday, May 4, 2021, 15:34 [IST]
Other articles published on May 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X