For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மாவுக்கு என்ன ஆனது?... மும்பை கொடுத்த ட்விஸ்ட்.. மழுப்பிய கெயிரன் பொல்லார்ட்!

துபாய்: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் இல்லாதது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை கொடுத்த ட்விஸ்ட்

மும்பை கொடுத்த ட்விஸ்ட்

இந்த போட்டியில் சென்னை அணியில் தான் முக்கிய வீரர்கள் இருக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை அணியில் அதிரடி மாற்றங்கள் இருந்தது. அதாவது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ப்ளேயிங் 11ல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கெயிரன் பொல்லார்ட் கேப்டனாக செயல்படவுள்ளார்.

பரவி வரும் கேள்வி

பரவி வரும் கேள்வி

நல்ல ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா ஏன் அணியில் இடம்பெறவில்லை என ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் ஹர்திக் பாண்ட்யாவும் ப்ளேயிங் 11ல் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

ரோகித் சர்மா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார். அதில் சிறப்பாகவும் விளையாடியிருந்தார். அவரால் உடனடியாக டி20 வடிவ கிரிக்கெட்டிற்கு ஆட்டத்தை மாற்ற முயன்றால் எளிதாக விக்கெட் ஆகிவிடுவார். எனவே சற்று ஓய்வு பெறுவதற்காக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதுமட்டுமல்லாமல் பொல்லார்ட் சமீபத்தில் சிபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். எனவே அவரை கேப்டன்சி செய்ய ரோகித் நினைத்துள்ளார்.

மழுப்பல்

மழுப்பல்

ரோகித் இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த கெயிரன் பொல்லார்ட் பதிலளிக்காமல் மழுப்பினார். பின்னர் ரோகித் ஆரோகியத்துடன் நலமுடன் இருக்கிறார். அவர் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. அவரை வெகுவிரைவில் அல்லது இன்னும் சில நாட்கள் கழித்து போட்டியில் காணலாம் என தெரிவித்தார்.

ஹர்திக் ஏன் இல்லை

ஹர்திக் ஏன் இல்லை

ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை அவரின் ஃபார்ம் தான் புறக்கணிப்புக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக ஹர்திக்கின் ஃபார்ம் மோசமான நிலையில் உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே திணறி வருகிறார். இதன் காரணமாகவே அவர் வெளியில் உட்கார வைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Story first published: Sunday, September 19, 2021, 20:14 [IST]
Other articles published on Sep 19, 2021
English summary
What happened to Rohit sharma, Pollard hints a answer in toss
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X