For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் பண்ணதே லேட்.. இனி மறுபடியும் நடக்கும்.. அஸ்வின் சொன்ன ஆருடம்.. மாறும் கிரிக்கெட்?

மும்பை: கிரிக்கெட்டில் உள்ள விதிகளை பயன்படுத்தி அவ்வப்போது சர்ச்சையிலும், விமர்சனத்திலும் சிக்குபவர் நமது தமிழக வீரர் அஸ்வின்.

Recommended Video

Ashwin becomes 1st player in IPL history to retire out | OneIndia Tamil

கடந்த ஐபிஎல் சீசனில் ஜாஸ் பட்லரை மான்கேட் செய்து அஸ்வின் அவுட்டாக்கினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு இடத்திற்கு 3 பேர் மோதல்.. ஆர்சிபிக்கு எதிராக பக்கா ப்ளான்.. சிஎஸ்கே களமிறக்கும் ப்ளேயிங் 11 இதோ!ஒரு இடத்திற்கு 3 பேர் மோதல்.. ஆர்சிபிக்கு எதிராக பக்கா ப்ளான்.. சிஎஸ்கே களமிறக்கும் ப்ளேயிங் 11 இதோ!

இதனையடுத்து, ஐசிசி விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, மான்கேட் செய்வதை அதிகாரப்பூர்வமாக மாற்றியது.

அஸ்வின் சம்பவம்

அஸ்வின் சம்பவம்

இந்த நிலையில் தான் தமிழக வீரர் அஸ்வின் புதிய சம்பவம் ஒன்றை செய்துள்ளார். அதில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் 6வது வீரராக களமிறங்கினார். இதில் அஸ்வின் 23 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்கள் அடித்தார். அப்போது 19வது ஓவரில் முதல் 2 பந்தை பிடித்திருந்த நிலையில், தம்மால் பெரிய ஷாட் ஆட முடியவில்லை என்று கூறி ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

விளக்கம்

விளக்கம்

காயம் அடைந்திருந்தாலோ, விளையாட உடல் தகுதி இல்லை என்றாலோ மட்டும் தான் வீரர்கள் ரிட்டயர்ட் ஹர்ட் ஆவது வழக்கம். தற்போது அஸ்வின் அந்த இலக்கணத்தையே மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த அஸ்வின், டி20 கிரிக்கெட் மாறி வருவதாக தெரிவித்தார்.

ரொம்ப தாமதம்

ரொம்ப தாமதம்

கால்பந்தில் எப்படி மாற்று வீரரை பாதியில் களத்துக்குள் அனுப்புவார்களோ, அதையே தான் நானும் செய்தேன். விதிக்கு உட்பட்டு தான் செய்தேன். இருக்கும் விதிகள் நாம் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம். என்னை கேட்டால் நான் இப்படி இந்த விதியை பயன்படுத்தியதே தாமதம் என்பேன்.இனி மேல் எனக்கு பின்னால் பலரும் இந்த விதியை பயன்படுத்துவார்கள்.

காரணம் இது தான்

காரணம் இது தான்

அன்று அதற்கு மேல் ஷாட் ஆடியும் என் பேட்டில் பந்து படவே இல்லை. ஆனால் ரியான் பராக் நல்ல ஃபார்மில் இருந்தார். அதனால் தான் அவர் பேட்டிங் செய்ய வந்தார் என்றும் அஸ்வின் விளக்கம் அளித்தார். அஸ்வினின் இந்த புத்திசாலித்தனத்தால் அன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 13, 2022, 21:09 [IST]
Other articles published on Apr 13, 2022
English summary
IPL 2022 – Ashwin reveals why he retired out and he defended his tatics நான் பண்ணதே லேட்.. இனி மறுபடியும் நடக்கும்.. அஸ்வின் சொன்ன ஆருடம்.. மாறும் கிரிக்கெட்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X