ஐபிஎல் ஏலத்தில் யாருக்கு யார் கிடைப்பார்கள்?

Posted By: Staff

பெங்களூரு: ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், 11வது சீசனை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை நடக்க உள்ள வீரர்கள் ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள், விளையாட விதிக்கப்பட்ட இரண்டாண்டு தடை நீக்கப்பட்டு மீண்டும் களமிறங்கியுள்ளன.

IPL auction today

அதனால், புதிதாக அனைத்து அணிகளுக்கும் மீண்டும் ஏலம் நடக்க உள்ளது. அதாவது தற்போதைய நிலையில் எந்த அணிக்கும் எந்த வீரர்களும் இல்லை. முதல் சீசனுக்கு நடந்ததுபோல் ஏலம் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆனால், தற்போது இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. அதாவது ஏற்கனவே அந்தந்த அணிகளுக்காக விளையாடிய, 5 வீரர்களை அவர்கள் தக்க வைத்து கொள்ளலாம்.

அதன்படி 8 அணிகளும் சில வீரர்களை தக்க வைத்துள்ளன. அதிகபட்சமாக மூன்று வீரர்கள் வரை தக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இதுவரை 18 வீரர்களை இந்த 8 எட்டு அணிகளும் தக்க வைத்துள்ளன.

புதிதாக அணியை உருவாக்க வேண்டிய நிலையில், இந்த 8 அணிகளுக்கும் ஏலத்தின் போது ஒரு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆர்.டி.எம்., எனப்படும் ரிட்டன்ஷன் டு மேட்ச் என்ற வாய்ப்பு. அதாவது ஏலத்தின்போது தங்கள் அணிக்காக ஏற்கனவே விளையாடிய வீரரை பெறும் உரிமை கிடைக்கிறது.

தற்போது நிலையில், ஒவ்வொரு அணிக்கும், 5 வீரர்களை தக்க வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய அணிக்காக விளையாடிய 3 வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள், இந்திய அணிக்காக விளையாடாத 2 வீரர்களை தேர்வு செய்யலாம்.

இதில் எப்படி வேண்டுமானாலும் மாற்றி எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்களைத் தவிர, மீதமுள்ள வீரர்களை தேர்ந்தெடுக்க அனைத்து அணிகளுக்கும் இந்த ஏலத்தில் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு 8 அணிகளும் தலா 5 வீரர்களை தக்க வைப்பதுடன், அணிக்கான மீதமுள்ள வீரர்களையும் இந்த ஏலத்தின்போது தேர்ந்தெடுக்கலாம்.

இன்றும், நாளையும் இந்த ஏலம் பெங்களூரில் நடக்கிறது. யார் யார் எந்த அணிக்காக விளையாடப் போகிறார்கள் என்பது இதன் முடிவில் தெரிய வரும்.

தற்போதைய நிலையில், வீரர்களை தக்க வைக்கும் உரிமையின் அடிப்படையில், ஒவ்வொரு அணியும் தேர்வு செய்துள்ள வீரர்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் – மகேந்திர சிங் டோணி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா.

மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா

டெல்லி டேர்டெவில்ஸ் – ரிஷப் பந்த், கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் அய்யர்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சர்பராஸ் கான்

ராஜஸ்தான் ராயல்ஸ் – ஸ்டீவ் ஸ்மித்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – அக்சார் படேல்

கோல்கத்தா நைட் ரைடர்ஸ் – சுனில் நரேன், ஆந்தரே ரசல்.


இந்த 18 பேரைத் தவிர யார் யார் எந்த அணிக்காக விளையாடப் போகிறார்கள் என்பது இன்றும், நாளையும் உறுதி செய்யப்படும்.


கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction – the scenario for the teams
Story first published: Saturday, January 27, 2018, 8:31 [IST]
Other articles published on Jan 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற