For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரன் அவுட் செய்யாமல் கேலி செய்த ஜடேஜா.. பதறிப் போன அஸ்வின், கோலி

ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில், இன்று இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸை 649 ரன்கள் குவித்து முடித்துக் கொண்டது.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாப நிலையில் இருக்கிறது. பலவீனமான அந்த அணியை துவைத்து எடுத்து வருகிறது இந்தியா.

இந்த நிலையில், இன்று ஒரு ரன் அவுட் வாய்ப்பின் போது பேட்ஸ்மேனை கேலி செய்யும் வகையில் நடந்து வந்த ஜடேஜாவால், சிறிய பதட்டம் ஏற்பட்டது.

தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்

தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா 649 ரன்கள் அடித்து டிக்ளர் செய்த உடன் வெஸ்ட் இண்டீஸ் தன் பேட்டிங்கை துவங்கியது. 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்களை இழந்த அந்த அணி, தடுமாறி வந்தது.

அம்ப்ரிஸ் செய்த தவறு

அடுத்து சுனில் அம்ப்ரிஸ், ஹெட்மையர் பேட்டிங் செய்தனர். பனிரெண்டாவது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹெட்மையர் சந்தித்தார். பந்தை லேசாக தட்டினார் அவர். ஹெட்மையர் ரன் ஓடாத நிலையில், எதிர்திசையில் இருந்த அம்ப்ரிஸ், எதையும் கவனிக்காமல் மறுபக்கம் ரன் ஓடி விட்டார்.

மைதானத்தில் பதற்றம்

இதனால் ஹெட்மையர், தான் எப்படியும் ரன் அவுட் ஆகி விடுவோம் என நினைத்து பொறுமையாக நடந்து வந்தார். பந்தை பிடித்த ஜடேஜா, அவர் பொறுமையாக நடப்பதை பார்த்து, கேலி செய்யும் வகையில் தானும் பொறுமையாக நடந்து வந்தார். அதே சமயம், ஜடேஜா பொறுமையாக வருவதை கவனித்த ஹெட்மையர் திடீரென ஓட, மைதானத்தில் ஒரு நொடி பதற்றம் ஏற்பட்டது, அஸ்வின் ஒருபுறம், கோலி ஒருபுறம் பதற்றமடைந்தார்கள். நல்ல வேளையாக ஜடேஜா நான்கு அடி இருக்கும் போது பந்தை வீசி ரன் அவுட் செய்து விட்டார்.

ஒருவேளை சொதப்பி இருந்தால்

ஒருவேளை சொதப்பி இருந்தால்

சரியாக பார்த்தால் ஜடேஜா தான் நின்று இருந்த இடத்தில் இருந்து அஸ்வினிடம் பந்தை வீசி இருக்க வேண்டும். ஆனால், கேலி செய்வதற்காக ஓடி வந்து எல்லோரையும் பதற வைத்துள்ளார் ஜடேஜா. ஒருவேளை இந்த ரன் அவுட்டை இன்று ஜடேஜா சொதப்பி இருந்தால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டி இருந்திருக்கும்.

Story first published: Friday, October 5, 2018, 18:22 [IST]
Other articles published on Oct 5, 2018
English summary
Jadeja teased the West Indies batsmen who got run out in the India vs West Indies test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X