கேப்டன் யாருப்பா… வலை வீசி தேடும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
கேப்டன் யாரென அறிவிக்காத கொல்கத்தா அணி- வீடியோ

டெல்லி: ஐபிஎல் 11வது சீசனுக்கான போட்டிகள் ஏப்ரலில் துவங்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் 7 அணிகள் தங்களுடைய கேப்டனை அறிவித்து விட்டன. ஆனால், முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் தற்போது நடக்க உள்ளது. இரண்டாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன.

KKR searching for captain

அதையடுத்து அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் கடந்த மாதம் மிக விமரிசையாக நடந்தது. ஒவ்வொரு அணியும் போட்டிப் போட்டு வீரர்களை ஏலம் எடுத்தது.

இத்தனை ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வினை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. மேலும், அணியின் கேப்டன் அவர் தான் என்றும் நேற்று அறிவித்தது.

இந்த சீசனில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகள் தங்களுடைய கேப்டனை அறிவித்துவிட்டன. இதில் விடுபட்டுள்ளது கோல்கத்தை நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே.

அணிகளின் கேப்டன்கள் :

சென்னை சூப்பர் கிங்ஸ் - மகேந்திர சிங் டோணி, டெல்லி டேர்டெவில்ஸ் - கவுதம் கம்பீர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் – அஸ்வின், மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் சர்மா, ராஜஸ்தான் ராயல்ஸ் – ஸ்டீவ் ஸ்மித், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோஹ்லி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – டேவிட் வார்னர்.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீரை அந்த அணி கழட்டி விட்டது. அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லயன், விக்கெட் கீப்பர்களான ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கோல்கத்தா டேர் டெவில்ஸ் கேப்டனாக வாய்ப்பு உள்ளது. இதில் கிறிஸ் லயன் பெயர் முன்னிலையில் உள்ளது. சீக்கிரம் அறிவித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, February 27, 2018, 11:42 [IST]
Other articles published on Feb 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற