
மிரட்டினார் மிதாலி ராஜ்
ரமேஷ் பவார் அளித்த விளக்கத்தில் மிதாலி அரைசதம் அடிக்க வேண்டி பந்துகளை வீணடித்தார், தான் துவக்க இடத்தில் களம் இறங்க வேண்டி அணி நலனை புறக்கணித்து பிரச்சனை செய்தார், முன்னாள் வீரரை வைத்து மிரட்டினார், ஒய்வு பெறுவேன் என பயமுறுத்தினார் என கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

ரமேஷ் பவார் குற்றச்சாட்டு
மேலும், மிதாலியால் விரைவாக ரன் குவிக்க முடியவில்லை. அவருக்கு உடற்தகுதி குறைவு என்பது போன்ற விஷயங்களையும் ரமேஷ் கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த செய்திகளுக்கு ரமேஷ் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிதாலி அதிர்ச்சி பதிவு
இந்த நிலையில், இந்த செய்திகளில் உள்ள ரமேஷ் பவாரின் குற்றச்சாட்டுகள் கண்டு அதிர்ச்சி அடைந்த மிதாலி ட்விட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். "எனக்கு நேர்ந்துள்ள அவமதிப்பு என்னை ஆழமாக வருத்தப்படவும், காயப்படவும் வைத்துள்ளது. இந்த விளையாட்டுக்கு எனது அர்ப்பணிப்பு, 20 ஆண்டுகள் நாட்டுக்காக ஆடியது, கடும் உழைப்பு, வியர்வை எல்லாம் வீணாகிவிட்டது. இன்று எனது நாட்டுப்பற்று, திறமை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. என் மீது சேற்றை வாரி கொட்டி இருக்கிறார்கள். இது எனது வாழ்வின் கருப்பான நாள். கடவுள் எனக்கு பலம் அளிப்பாராக!" என பதிவிட்டுள்ளார் மிதாலி ராஜ்.

மிதாலி விவகாரம் - என்ன நடந்தது?
ரமேஷ் பவார் தன் பக்க நியாயத்தை பற்றி கூறினார். அந்த செய்தியை இங்கே படிக்கலாம்.