அவங்க பென்ச் பாருங்க.. கண்டிப்பாக இவங்கதான் சாம்பியன்.. பாட் கமின்ஸ் பரபரப்பு கணிப்பு.. பின்னணி!

சென்னை : ஐபிஎல் 2021 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை ஜெயிப்பதுதான் முக்கியமானது என்று ஆஸ்திரேலிய பௌலர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பென்ச் வீரர்கள் கூட மிகவும் வலிமையாக உள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா நிலையாக வேகப்பந்து, ஸ்பின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாளை கலக்கல் துவக்கம்

நாளை கலக்கல் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் நாளை கலக்கல் துவக்கத்துக்கு தயாராக உள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. கடந்த இரு முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் இந்த முறை ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறது.

பாட் கமின்ஸ் பாராட்டு

பாட் கமின்ஸ் பாராட்டு

இந்நிலையில் கடந்த சீசன்களை போல, இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொள்ள தீவிரம் காட்டுவது முக்கியம் என்று ஆஸ்திரேலிய பெளலர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். கேகேஆர் அணிக்காக விளையாடவுள்ள பாட் கமின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் பென்ச் வீரர்கள்கூட மிகவும் வலிமையாக உள்ளதாக கூறியுள்ளார்.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த நிலைத்தன்மையுடன் விளையாடி வருவதாகவும் அவர் வேகப்பந்தையும் சிறப்பாக எதிர்கொள்கிறார் மற்றும் ஸ்பின் பந்துகளையும் சிறப்பாக எதிர்கொள்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உற்சாகத்தை அளிக்கும் ஆட்டம்

உற்சாகத்தை அளிக்கும் ஆட்டம்

அனைத்து பந்துகளையும் சிறப்பாக அடித்து ஆடும் திறமை ரோகித்துக்கு உள்ளதாகவும் அவர் மும்பை இந்தியன்சின் சிறப்பான கேப்டன் என்றும் அவருடைய போட்டிகளை பார்ப்பது மிகவும் உற்சாத்தை அளிக்கும் என்றும் கமின்ஸ் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit Sharma is really consistent, plays fast bowling well -Pat Cummins
Story first published: Thursday, April 8, 2021, 14:12 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X