For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா உட்கார வைப்பீங்க?... ஐபிஎல் ஏலத்தில் சி.எஸ்.கேவிற்கு கொடுக்கப்பட்ட இடம்!

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது.

By Shyamsundar

சென்னை: இந்த வருட கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்லுக்கான கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பித்துவிட்டது. ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது.

காலை 9 மணிக்கு தொடங்கு இது மாலை வரை நடக்கும். ஐடிசி ராயல் கார்டியனா ஹோட்டலில் நடக்கும். இதன் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வாங்கி இருக்கிறது.

இந்த நிலையில் அனைத்து அணிகளும் எங்கே உட்கார வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சில சுவாரசியமான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

லிஸ்ட்

இதில் அனைத்து வீரர்களும் இருக்கும் லிஸ்ட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள். இதில் தற்போது 578 வீரர்கள் இறுதி பட்டியலுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இந்த 578 பேரில் 360 பேர் இந்தியாவை சேர்ந்த வீரர்கள்.

இரு அணிகள்

இந்த ஏலத்தில் மற்ற அணிகளை விட இரண்டு அணிகள் வீரர்களுக்கு அதிகம் போட்டியிட முடியும். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதில் நிறைய வீரர்களை எடுக்க வாய்ப்பு உள்ளது. இருவரிடமும் அதிகம் 67.5 கோடி பணம் இருக்கிறது.

வெளிநாடு

இதில் மொத்தமாக இருக்கும் 578 பேரில் 278 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். 58 ஆஸ்திரேலிய வீரர்களும், 57 தென்னாப்பிரிக்க வீரர்களும், 39 இலங்கை, மேற்கிந்திய தீவுகள் வீரர்களும் உள்ளனர்.

இடம்

ஏலம் கொடுக்கப்படும் அரங்கில் அந்த அணிக்கு எந்த இடம் என்று ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் சென்னை அணிக்கு 6 வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், பெங்களூர் சென்னைக்கு அருகருகே இருக்கிறது. இந்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Story first published: Saturday, January 27, 2018, 10:11 [IST]
Other articles published on Jan 27, 2018
English summary
IPL auction 2018 held in Bengaluru today and tomorrow. CSK, Rajasthan team has back to the IPL. 8 Team participating in this IPL. 578 players and 300 Indian players participating in the auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X