என்ன ப்ரீத்தி ஜிந்தா இப்படி கூட பண்ணுவீங்களா... ஏலத்தில் நடத்த அலப்பறைகள்!

Posted By:
ப்ரீத்தி ஜிந்தா இப்படி கூட பண்ணுவீங்களா

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் அனைவரையும் விட ப்ரீத்தி ஜிந்தா மிகவும் துடிப்பாக இருந்தார்.

தமிழ்ப்படங்களில் வரும் வில்லி கேரக்டர் போல அனைத்து அணிகளையும் இவர் தனியாக வைத்து செய்து கொண்டு இருந்தார். முக்கியமாக சென்னை அணியையும், மும்பை அணியையும் ஆட்டிப்படைத்தார்.

இவரை குறித்து சமூக வலைத்தளங்களில் பலவாறு கருத்து வெளிவருகிறது. தனி பெண்ணாக அவர் கட்டிய கெத்து கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணுக்குள்ளயே நிற்கிறது.

கை தூக்கினார்

கை தூக்கினார்

பள்ளியில் எப்படி படிக்க கூடிய பிள்ளைகள் அனைத்திற்கும் கை தூக்குவார்களோ அதேபோல் ப்ரீத்தி ஜிந்தா அனைத்திற்கும் கை தூக்கினார். வீரரை எடுக்கிறோமோ இல்லையோ கையை தூக்கி வைப்போம் என்று எல்லோரையும் கேட்டார்கள். பல அணிகளுக்கு இது தொல்லையாக இருந்தது.

அஸ்வினை எடுத்தார்

அஸ்வினை எடுத்தார்

நேற்று இவர் செய்த செயலில் மிகவும் சிறப்பான சம்பவம் இதுதான். அஸ்வினை கஷ்டப்பட்டு 9 கோடி கொடுத்து அசால்ட்டாக எடுத்தார். சென்னை ரசிகர்களுக்கு இதன் காரணமாகவே இவர் மீது கோபம் இருக்கிறது. பஞ்சாப்பை ஆளப்போறான் தமிழன் என்று தற்போது சமாதானம் ஆகி இருக்கிறார்கள்.

வலி

ப்ரீத்தி ஜிந்தாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக பல் வலி இருக்கிறது. ஆனாலும் அதை தாங்கிக் கொண்டு இவர் ஏலம் எடுக்க வந்துள்ளார். முக்கியமாக தன்னை சுற்றி எப்போதும் கேமரா சரியாக இருக்கும்படி கவனமாக பார்த்துக் கொண்டது அப்பட்டமாக தெரிந்தது.

ஆட்டம் இருக்கு

ஆட்டம் இருக்கு

இன்னும் இவரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 21.90 கோடி பணம் இருக்கிறது. பல முக்கியமான வீரர்களை ஏற்கனவே இவர் எடுத்துவிட்டார். இன்னும் ஒரு ஆர்டிஎம் வேறு மீதம் இருக்கிறது. இதனால் கண்டிப்பாக இன்றும் இவர் கெத்து ஆட்டம் ஆடுவார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction 2018 held in Bengaluru yesterday and today. Preity Zinta becomes fire in IPL auction 2018. She took lot of important players.
Story first published: Sunday, January 28, 2018, 10:26 [IST]
Other articles published on Jan 28, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற