For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களை போய் டீமில் எடுத்தேனே.. ரோஹித் சர்மாவை புலம்ப வைத்த வீரர்.. மும்பை சரிந்தது இங்குதான்!

சென்னை : இன்றைய ஐபிஎல் 2021 தொடரின் 5வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்று கேகேஆர் பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் மும்பை வீரர் கிறிஸ் லின்னுக்கு பதிலாக குவின்டன் டீ காக் களமிறக்கப்பட்ட நிலையில் அவர் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

5வது போட்டி

5வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் 5வது போட்டி இன்றைய தினம் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. கடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில் கேகேஆர் அணி சிறப்பான வெற்றியுடன் தொடரை துவக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

இன்றைய தினம் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தநிலையில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான பேட்டிங்கை அளித்தது. ஆனால் அந்த அணியின் குவின்டன் டீ காக் 2 ரன்களில் வருண் சக்ரவர்த்தி பௌலிங்கில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

குவின்டன் டீ காக் களம்

குவின்டன் டீ காக் களம்

கடந்த ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. ஆனால் அணியின் கிறிஸ் லின் 49 ரன்களை குவித்திருந்தார். குவாரன்டைனில் ஈடுபட்டிருந்த காரணத்தால் குவின்டன் டீ காக் அந்த போட்டியில் இடம்பெறவில்லை.

2 ரன்களில் அவுட்

2 ரன்களில் அவுட்

இந்நிலையில் அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக டீ காக்கை இந்த போட்டியில் கிறிஸ் லின்னுக்கு பதிலாக களமிறக்கும் முடிவை கேப்டன் ரோகித் சர்மா எடுத்த நிலையில், இன்றைய போட்டியில் களமிறங்கி விளையாடிய டீ காக், 2 ரன்களில் அவுட்டாகியுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பாக விளையாடிய டீ காக்

சிறப்பாக விளையாடிய டீ காக்

கடந்த 2020 சீசனில் சிறப்பாக விளையாடி 503 ரன்களை குவித்துள்ளார் குவின்டன் டீ காக். இதில் 4 அரைசதங்கள் அடங்கும். இந்நிலையில் அதே ஆட்டத்தை அவரிடம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனிலும் எதிர்நோக்கியுள்ளது. அதன்படி கிறிஸ் லின்னுக்கு பதிலாக டீ காக் களமிறக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, April 13, 2021, 22:21 [IST]
Other articles published on Apr 13, 2021
English summary
While MI lost the tournament opener to RCB, KKR registered a 10-run win over SRH on Sunday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X