மரண பயம் காட்டிய சஞ்சு சாம்சன்.. பெங்களூரை பந்தாடி வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Posted By:
பெங்களூரின் பந்துவீச்சை பந்தாடிய ராஜஸ்தான்

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 7வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று நடந்தது.

இந்த முறையாவது கோஹ்லி தலைமையிலான அணி கோப்பை வெல்ல முடிவெடுத்துள்ளது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. இதனால் இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

இந்த போட்டி தற்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் அணியில் பழைய வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளனர். பெங்களூர் அணியில் சர்ப்ராஸ் கானுக்கு பதில் பவான் நெஹி இடம்பெற்றுள்ளார்.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்த போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றுது. டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்து வீச முடிவெடுத்தது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி அதிரடியாக 217 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் அதிரடியாக 45 பந்தில் 92 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10 சிக்ஸ், 2 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரஹானே 20 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணியில் சாஹல் கிறிஸ் வோக்ஸ் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

கோஹ்லி அதிரடி

கோஹ்லி அதிரடி

அடுத்த ஆடிய பெங்களூர் அணி தொடக்கத்திலேயே மெக்குலமை 4 விக்கெட்டுக்கு இழந்தது. ஆனால் விராட் கோஹ்லி மிகவும் அதிரடியாக ஆடினார். 30 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் என 57 ரன்கள் எடுத்தார். ஆனால் கடைசியில் ஷேரேயஸ் கோபால் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

போட்டி முடிவு

போட்டி முடிவு

அதன்பின் பெங்களூர் அணி ஆட்டம் காண தொடங்கியது. 5 விக்கெட் இழந்த பின் மொத்தமாக அணியின் ரன் ரேட் குறைந்தது. கடைசியில் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Rajasthan faces Bangaluru in IPL 2018
Story first published: Sunday, April 15, 2018, 15:46 [IST]
Other articles published on Apr 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற