தோனி கூறிய முக்கிய அட்வைஸ்.. மிக உதவியது.. ஜடேஜாவுக்கு சொன்ன அதே வார்த்தைகள்..மனம் திறந்த ரஷித் கான்

அபுதாபி: சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, தனக்கு வழங்கிய மிக முக்கியமான ஆலோசனையை ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அயல்நாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டு அணிகளுக்காகவும், மற்ற நாடுகளின் டி20 தொடரிலும் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் ஒரு வீரர் சிக்கினார்.. பூதாங்கரமாகும் 'இனவெறி’ சர்ச்சை.. அதிரடி நடவடிக்கையில் இங்கிலாந்து!

இன்னும் சிலர் வீடுகளில் இருந்துகொண்டு சமூக வலைதளங்களங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானும் ரசிகர்கள் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

சிறந்த பவுலர்

சிறந்த பவுலர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் லெக் ஸ்பின்னர் ரஷித் கான். ஐபிஎல் தொடரில் குறைவான எகனாமி விட்டுக்கொடுத்த பவுலர்களில் ரஷித் கானும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட ரஷித் கானின் பந்துவீச்சில் சற்று திணற தான் செய்கிறார்கள். இந்நிலையில் இவர் தனது ஐபிஎல் குறித்து பேசியுள்ளார்.

தோனி கேப்டன்சி

தோனி கேப்டன்சி

சமூக வலைதளத்தில் பேசிய அவர், எம்.எஸ்.தோனியின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அவருக்கு கீழ் விளையாடுவது, அதில் இருந்து கிடைக்கும் அனுபவமும், எனது கிரிக்கெட் வாழ்வுக்கு மிக முக்கியம். ஒரு பந்துவீச்சாளருக்கு, விக்கெட் கீப்பர் என்பவர் மிகவும் தேவை. அப்படி பார்க்கும் போது, தோனியை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை.

தோனியின் அட்வைஸ்

தோனியின் அட்வைஸ்

ஒவ்வொரு முறையும் போட்டி முடிந்தவுடன் நான் அவரிடம் அறிவுரை பெறுவேன். கடந்த முறை அவர், நீ ஃபீல்டிங் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத நேரங்களில் நீ, மிகவும் சிரமப்பட்டு கீழே விழுந்து பந்தை தடுக்கிறாய். ஒரே ஒரு ரஷித் கான் தான் உள்ளார். மக்கள் அவரது ஆட்டத்தை காண காத்துள்ளனர். உனக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் என்ன செய்வது. நான் ஜடேஜாவுக்கும் இதே அறிவுரையை தான் கூறியுள்ளேன் எனத்தெரிவித்தார்.

ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ரஷித் கான் விளையாடி வருகிறார். இந்த சீசனில் ரஷித் கானிடம் இதுவரை பெரிய அளவில் விக்கெட்கள் வரவில்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 விக்கெட்களை எடுத்துள்ளார். தொடரின் 2வது பாதி அமீரகத்தில் நடைபெறுவதால், அங்கு அவரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Afganishtan Player Rashid khan Shares his IPL Experiences and, Reveals The valuable Advice he got from Dhoni
Story first published: Tuesday, June 8, 2021, 13:02 [IST]
Other articles published on Jun 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X