நீண்ட நேர யோசனை.. டாஸின் போது தடுமாறிய ரோகித் சர்மா..இறுதியில் தந்த ட்விஸ்ட்.. 2வது ODIல் சுவாரஸ்யம்

ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸின் போது ரோகித் சர்மா செய்த விஷயம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்றிருந்தது. இதனையடுத்து தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள 2வது போட்டி ராய்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் நடைபெறும் 50வது மைதானம் இதுவாகும். வெற்றி ஆதிக்கத்தை தொடர்ந்து காட்ட இந்திய அணி வீரர்களும், தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர் யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர்

டாஸ்

டாஸ்

இந்நிலையில் டாஸின் போதே சுவாரஸ்ய விஷயம் நடந்தது. டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா என்ன முடிவென்பதை நீண்ட நேரமாக சொல்லாமலேயே தயங்கிக்கொண்டிருந்தார். என்ன ஆனது என புரியாமல் எதிரணி கேப்டனும் குழம்பினார். இறுதியில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக முடிவெடுத்தார். முதல் முறையாக இந்த களத்தில் சர்வதேச போட்டி நடைபெறுவதால், என்ன தேர்வு செய்வது என பலகட்ட ஆலோசனை நடந்தது. அதில் குழம்பிவிட்டேன் என விளக்கம் அளித்தார்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

இந்த களம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்குமே சம அளவில் உதவக்கூடிய ஒன்றாகும். பவுண்டரி எல்லைகள் நீண்ட தூரங்களில் இருக்கும். எனினும் சராசரியாக 280 வரை அடிக்கலாம். குறிப்பாக தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் கலக்கலாம். போக போக பிட்ச் மெதுவாக இருக்கும். இங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது நல்ல முடிவு தான். ஏனென்றால் 2வது இன்னிங்ஸில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் பந்துவீச கடினமாக இருக்கும்.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே அணியுடன் விளையாடுகிறோம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Team India Rohit sharma Confused the fans during India vs new zealand 2nd ODI, here is the full details
Story first published: Saturday, January 21, 2023, 13:33 [IST]
Other articles published on Jan 21, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X