For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை மிஞ்சிய ரோகித் சர்மா... ஒரே வருடத்தில் இப்படி ஒரு சாதனையா.. கேப்டன்சியில் புது உச்சம்!

மேன்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என கைப்பற்றி இந்திய அணி தரமான கம்பேக் கொடுத்துள்ளது.

“ உண்மையை ஒப்புக்கொள்கிறேன்..” 3வது ஒருநாள் போட்டியில் நடந்த தவறு.. கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்! “ உண்மையை ஒப்புக்கொள்கிறேன்..” 3வது ஒருநாள் போட்டியில் நடந்த தவறு.. கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்!

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2 - 2 என சமன் செய்து ஏமாற்றிய போதும், டி20 தொடரை 2 - 1 எனவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 எனவும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி கொடுத்த பெருமை ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது.

 ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இந்நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் மேலும் சில சாதனைகளும் சேர்ந்துள்ளன. அதாவது இங்கிலாந்து மண்ணில் இதுவரை 2 முறை மட்டுமே ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. 1990ம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் இந்தியா வென்றது. அதன்பின் 2015ம் ஆண்டு தோனி தலைமையில் வென்றிருந்தது. இதில் 3வது கேப்டனாக தனது பெயரை பதிவு செய்துள்ளார் ரோகித் சர்மா.

முதல் கேப்டன்

முதல் கேப்டன்

இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்து மண்ணில் டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என இரண்டையும் வென்றுக்கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இங்கிலாந்து மண்ணில் போட்டியிட்டு வெற்றி பெறுவது சாதாரணம் அல்ல. நாங்கள் சாதிக்க வேண்டும் என நினைத்து வந்தோம்.அது நிறைவேறிவிட்டது என மகிழ்ச்சியுடன் கூறினார்.

 அசர வைக்கும் ரெக்கார்ட்

அசர வைக்கும் ரெக்கார்ட்

ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 81.25% ஆகும். டி20 கிரிக்கெட்டில் 83.87 சதவீதமும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சதவீதமும் வெற்றிகளை ரோகித் வைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 14 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொடுத்த ஒரே கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 18, 2022, 17:27 [IST]
Other articles published on Jul 18, 2022
English summary
Rohit sharma Captaincy record ( ரோகித் சர்மா கேப்டன்சி ரெக்கார்ட் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை ரோகித் சர்மா முறியடித்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X