விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை - ரோகித் சர்மா உறுதி

மும்பை : தன்னுடைய மனைவி மற்றும் மகளின் அன்பாலேயே மற்றவர்களின் விமர்சனங்களை தன்னால் புறந்தள்ள முடிவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் அன்பாலேயே தான் இத்தகைய வெற்றியாளராக வலம் வருவதாகவும் ரோகித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளை கடந்துள்ள ரோகித் சர்மா, கடந்த ஆண்டில் துவக்க ஆட்டக்காரராக 2,442 ரன்களை குவித்து சாதனை புரிந்துள்ளார்.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக விளங்கும் ரோகித் சர்மா, இந்திய அணியின் முக்கியமான வீரராகவும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் விளங்கி வருகிறார்.

திரும்பி பார்த்த ரோகித் ஷர்மா

திரும்பி பார்த்த ரோகித் ஷர்மா

சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளை கழித்துள்ள ரோகித் சர்மா, தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்துள்ளார்.

ரோகித் சர்மா சாதனை

ரோகித் சர்மா சாதனை

கடந்த ஆண்டில் அனைத்துவிதமான ஆட்டங்களிலும் 2,442 ரன்களை குவித்து ரோகித் சர்மா சாதனை புரிந்துள்ளார். மேலும் முன்னாள் ஆட்டக்காரர்களின் பல்வேறு சாதனைகளையும் அவர் முறியடித்து வருகிறார்.

மகிழ்ச்சி தெரிவிக்கும் ரோகித்

மகிழ்ச்சி தெரிவிக்கும் ரோகித்

தன்னுடைய சாதனைகளுக்கு தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவே காரணம் என்று ரோகித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா மகிழ்ச்சி

ரோகித் சர்மா மகிழ்ச்சி

தனக்கு எதிரான விமர்சனங்களை புறந்தள்ள தன்னுடைய குடும்பம் மற்றும் அவர்கள் தனக்கு அளிக்கும் அன்பு, மகிழ்ச்சியே காரணம் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

குழப்பமே மிஞ்சும் -ரோகித்

குழப்பமே மிஞ்சும் -ரோகித்

ஆரம்ப காலங்களில், வெற்றி, தோல்வி குறித்து கவலைப்பட்டு குழப்பமடைந்ததாகவும், ஆனால் தற்போது அவை குறித்து கவலை படுவதில்லை என்றும் கூறியுள்ள ரோகித், இதனால் விளையாட்டை அனுபவித்து விளையாட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடப்பவை நடந்தே தீரும்

நடப்பவை நடந்தே தீரும்

டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஒரே நினைப்பில் தான் விளையாடுவதாகவும், நடப்பவை நடந்தே தீரும் என்ற மனநிலை, தன்னை சிறப்பாக வழிநடத்துவதாகவும் ரோகித் மேலும் குறிப்பிட்டார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

மற்றவர்களின் விமர்சனங்கள் தன்னை பாதிக்காதவாறு, தனக்கு தானே கவசத்தை போட்டுக் கொண்டுள்ளதாகவும், குடும்பத்தின் ஒத்துழைப்பு மற்றும் இந்த மனநிலை, தன்னை சிறப்பாக விளையாட செய்வதாகவும் ரோகித் கூறியுள்ளார்.

சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

மற்றவர்களின் விமர்சனங்கள் பாதிக்காதவாறு தன்னை சுற்றி சுவற்றை அமைத்துக் கொள்ள ரிஷப் பந்த்திற்கு தான் அறிவுரை வழங்கியதாகவும், இதன்மூலம் விமர்சனங்களை தெரிவிப்பவர்கள் சுவற்றுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பேசுவார்கள் என்றும் ரோகித் தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு சிறப்பாக உள்ள இந்த செயல்பாடு, ரிஷப்பிற்கு சரிபட்டு வருமா என்பது குறித்து தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rohit Sharma opens on his family which helps him keeps Negativity at Bay
Story first published: Monday, January 6, 2020, 18:11 [IST]
Other articles published on Jan 6, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X