For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிரந்தர கேப்டனாக ஆசை.. ரோஹித் சர்மா பரபரப்பு.. என்ன நடக்கிறது இந்திய அணியில்!

இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக இருக்க தயார் என்று ரோஹித் சர்மா தெரிவித்து இருக்கிறார்.

டெல்லி: இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக இருக்க தயார் என்று ரோஹித் சர்மா தெரிவித்து இருக்கிறார்.

ஒரு காலத்தில் இந்திய அணியில் 11 வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கும். முழுக்க முழுக்க திறமையான 11 வீரர்களை அணிக்கு எடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

ஆனால் இப்போது நிறைய திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அணிக்குள் வருவதற்கு முன்பே ஐபில் காரணமாக புகழ் வெளிச்சம் பெற்று, அணிக்குள் நுழைய காத்து இருக்கிறார்கள்.

ரொட்டேஷன் பாலிசி

ரொட்டேஷன் பாலிசி

இதனால் இந்தியனையில் 'ரொட்டேஷன் பாலிசி' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்து தொடர் போட்டிகளில் விளையாடுவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்துவிடக் கூடாது என 'ரொட்டேஷன் பாலிசி' என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி வீரர்களை அணியில் மாற்றி மாற்றி களம் இறக்கி வருகின்றனர். டெஸ்ட் அணியில் இருப்பவர்கள் ஒருநாள் அணியில் இருக்க மாட்டார்கள். ஒருநாள் அணியில் இருப்பவர்கள் டி20ல் இருக்க மாட்டார்கள்.

கேப்டன் ரொட்டேஷன்

கேப்டன் ரொட்டேஷன்

அதேபோல்தான் கேப்டன் பதவியும். பெரிய தொடர் என்றால் கோலி கேப்டனாக இருப்பார். அதுவே சிறிய தொடர் என்றால் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார். இலங்கை , வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போட்டி என்றால் ரோஹித்தான் கேப்டன்.

சூப்பர்

சூப்பர்

இந்த நிலையில் இதுவரை கேப்டனாக இருந்த தொடரில் எல்லாம் ரோஹித் சர்மா சிறப்பாக அணியை வழிநடத்தி இருக்கிறார். அவர் கேப்டனாக இருந்த எல்லா தொடரையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. அதேபோல் அவர் கேப்டனாக 95 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளார்.

நிரந்தர பதவி

நிரந்தர பதவி

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்தர கேப்டனாக வேண்டும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். தனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதாக அவர் கூறியுள்ளார். தனக்கு அப்படி வாய்ப்பு வந்தால் அணியை சரியாக வழிநடத்துவேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, September 30, 2018, 12:56 [IST]
Other articles published on Sep 30, 2018
English summary
Rohit Sharma wants to be the permanent captain for Indian cricket team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X