சி.எஸ்.கே.வுக்கு ஆரம்பமே அதிரடி.. மூவர் கூட்டணி வியூகம் தோல்வி.. ஆரஞ்ச் தொப்பி ருத்ராஜ் வசம்!

துபாய்: ஐ.பி.எல் 2021 இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. கொல்கத்தா கேப்டன் மோர்கன் தங்கள் அணி பவுலிங் செய்யும் என்று அறிவித்தார்.

6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்! 6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்!

அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஒப்பனர்களாக ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ் பேட்டிங் செய்து வருகின்றனர்.

அபாரமான தொடக்கம்

அபாரமான தொடக்கம்

தொடக்கமே சென்னை அணிக்கு அபாரமான தொடக்கமாக அமைந்துள்ளது. மோர்கன் தங்கள் அணியில் பலமான ஸ்பின் அட்டாக்கை முதலில் கொண்டு வந்தார். இந்த சீசனில் அசுரத்தனமாக ஆடி வரும் ருத்ராஜ் வெறித்தனமாக ஆடி வருகிறார். ஷாகிப் அல் ஹசன் ஓவரில் அருமையான சிக்ஸர், பவுண்ட்டரி என்று விளாசினார்.

ருத்ராஜ் கெய்க்வாட் ஆட்டம்

ருத்ராஜ் கெய்க்வாட் ஆட்டம்

அடுத்ததாக பெர்குசன் பவுலிங் போட வந்தார். ஷாட் பால் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெர்குசன் பவுலிங்கை பவுண்டரிகளாக போட்டு அடித்தார் ருத்ராஜ் கெய்க்வாட். பெர்குசன் ஒரே ஓவரில் 12 ரன் வந்துள்ளது. மொத்தத்தில் சி.எஸ்.கே பேட்டிங் அற்புதமாக அமைந்துளளது. 8 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்துளள்னர் தோனியின் படையினர்.

ஆரஞ்ச் தொப்பி

ஆரஞ்ச் தொப்பி

இந்த சீசனில் தொடர்ந்து சென்னை அணியை காப்பாற்றி வரும் ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் எடுக்கும் ஆரஞ்ச் தொப்பியை தட்டி பறித்துள்ளார். கே.எல்.ராகுலிடம் இருந்து ஆரஞ்ச் கோப்பையை பறித்துள்ள ருத்ராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் 450-க்கும் மேலான ரன்களை குவித்துளளார். இறுதிபோட்டியில் தொடக்க வீரர்களை வீழ்த்த நினைத்த மோர்கனின் பாச்சா பலிக்கவில்லை.

மூவர் கூட்டணி தோல்வி

மூவர் கூட்டணி தோல்வி

மூவர் கூட்டணி என்று அழைக்கப்படும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஷாகிப் அல் ஹசன் ஓவரை சென்னை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் சென்னை வெல்ல ஆரம்பமே அறிகுறி சிறப்பாக உளள்து. பொறுத்திருந்து பார்ப்போம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rudraj Kejriwal, who has been saving the Chennai team this season, has snatched the orange cap for most runs
Story first published: Friday, October 15, 2021, 20:15 [IST]
Other articles published on Oct 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X