For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லாரா, மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த சிறப்பு பரிசு. வாத்தியத்தை இசைத்து காட்டி சச்சின் உற்சாகம்!

மும்பை : கடந்த 2013ல் நவம்பர் 16ம் தேதி சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

நேற்று இந்த தினம் அவரது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உள்ளிட்டவர்களால் நினைவுகூறப்பட்டு வாழ்த்துக்கள் பகிரப்பட்டது.

இந்நிலையில், தன்னுடைய ஓய்வின்போது மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் பிரையன் லாரா ஆகியோர் இணைந்து தனக்கு அளித்த சிறப்பு பரிசினை டிவிட்டரில் வீடியோ மூலம் அவர் பகிர்ந்துள்ளார்.

2013 நவம்பர் 16ம் தேதி ஓய்வு

2013 நவம்பர் 16ம் தேதி ஓய்வு

கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ல் நவம்பர் 16ம் தேதி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அந்த தினத்தை நேற்று அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நண்பர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடினர்.

இசைக்கருவி பரிசு

இசைக்கருவி பரிசு

இந்நிலையில் அந்த நாளை நினைவுக்கூறும் வகையில் தன்னுடைய ஓய்வின்போது மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தன்னுடைய நண்பர்கள் பிரையன் லாரா, கெயில் ஆகியோர் இணைந்து அளித்த சிறப்பு பரிசான இசைக்கருவியை

ரசிகர்களுக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் காண்பித்து அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

லாரா இசைத்த டிரம்

மேலும் அந்த இசைக்கருவியை அவர் வாசித்தும் காட்டினார். தன்னுடைய வீட்டிற்கு வந்த லாரா, அந்த டிரம்மை இசைத்து காட்டியதாகவும் அது சிறப்பான இசையை வெளிப்படுத்தியதாகவும் கூறிய சச்சின் டெண்டுல்கர். தானும் அந்த கருவியை இசைத்துக் காட்டினார். ஆனால், அவர் அளவிற்கு தனக்கு அந்த இசை சாத்தியப்படுமா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

100 சதங்கள் அடித்த சாதனை

100 சதங்கள் அடித்த சாதனை

கடந்த 2013 நவம்பர் 16ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் சச்சின் டெண்டுல்கர். மும்பை வான்கடே மைதானத்தில் அவர் தனது ஓய்வை அறிவித்தார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 100 சதங்களை அடித்துள்ள அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

Story first published: Tuesday, November 17, 2020, 12:02 [IST]
Other articles published on Nov 17, 2020
English summary
Tendulkar is the only player in the history to play 200 matches in the longest format
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X