For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கூறிய அந்த வார்த்தை.. சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவில் நுழைந்த போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்.. விவரம்!

சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா நுழைந்த தருணம் மற்றும் தோனி கூறிய முதல் வார்த்தை குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமானதாகும். 2008ம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள இந்த அணி ஒரே ஒரு முறை மட்டுமே ப்ளே ஆஃப்-க்குள் நுழையாமல் போயுள்ளது.

 உலகக் கோப்பை டி20.. 9 இந்திய நகரங்கள்.. பரபரக்கும் 'SGM' மீட்டிங் உலகக் கோப்பை டி20.. 9 இந்திய நகரங்கள்.. பரபரக்கும் 'SGM' மீட்டிங்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஃபார்மில் இருந்தது. மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

சென்னை அணி

சென்னை அணி

சென்னை அணி இத்தனை வருடங்களாக ஒரு வெற்றி மிகுந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ்.தோனி தான். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் ஐபிஎல் தொடரை அதிரவைத்தது என்றே கூறலாம். இதுவரை ஐபிஎல்-ல் 200 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 5491 ரன்களை விளாசியுள்ளார். ஐபிஎல்-ல் அதிக ரன்கள் அடித்த 3வது வீரர் இவர் ஆகும். இந்தாண்டும் இவரின் வருகை சிஎஸ்கேவுக்கு பெரும் பக்கபலமாய் அமைந்தது.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

இப்படிபட்ட சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் சிஎஸ்கேவில் விளையாடி வருகிறார். முதல் சீசனின் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஆரம்ப தொகையாக சுமார் ரூ. 55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடும் போட்டிகளுக்கு இடையே சிஎஸ்கே அணி அவரை ரூ.2.6 கோடிக்கு வாங்கியது.

சிஎஸ்கேவில் நுழைந்த தருணம்

சிஎஸ்கேவில் நுழைந்த தருணம்

இதுகுறித்து 'Believe' என்ற புத்தகத்தில் நினைவை பகிர்ந்துள்ளார் சுரேஷ் ரெய்னா. அதில், ஐபிஎல் தொடர் தொடங்கிய போது நானும் மற்ற இந்திய வீரர்களை போலவே எந்த அணிக்கு ஆடப்போகிறோம் என தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தேன். பின்னர் தோனி தலைமையிலான சிஎஸ்கே என்னை ஏலம் எடுத்ததை அறிந்தேன். அந்த அணியில் சகவீரர்களாக மேத்தீவ் ஹெய்டென், முத்தையா முரளிதரன், ஸ்டீபன் ஃப்ளெம்மிங் ஆகியோர் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தோனி கூறிய வார்த்தைகள்

தோனி கூறிய வார்த்தைகள்

நான் சிஎஸ்கேவால் வாங்கப்பட்டதை தோனி பாயே எனக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது அவர் நான் விளையாடுவதை பார்க்க ஆவலுடன் உள்ளேன் என தெரிவித்தார். தோனியின் மீது ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவரின் அந்த வார்த்தை மகிழ்ச்சி தந்தது. ஐபிஎல் தொடர்தான் எனக்கும் தோனிக்கும் இடையே இருந்த நட்பை மேலும் வலுவாக்கியது.

Story first published: Wednesday, May 19, 2021, 22:26 [IST]
Other articles published on May 19, 2021
English summary
Suresh Raina Shares MS Dhoni’s reaction after he bagged an IPL contract for CSK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X