கோஹ்லிக்கு அனுஷ்கா கிடைக்க இவர் தாங்க காரணம்!

Posted By: Staff

டெல்லி: என்னுடைய வாழ்க்கையை, என்னுடைய செயல்பாடுகளை மாற்றியவர், லேடி லக்' நடிகை அனுஷ்கா சர்மா. ஆனால், அவர் எனக்கு கிடைப்பதற்கு முக்கியமான நபர் எனக்கு சரியான நேரத்தில் அளித்த ஆலோசனைதான் காரணமாக அமைந்தது என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றவர் கோஹ்லி. மைதானத்தில் இறங்கி விட்டால் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர் கோஹ்லி.

தற்போது, அந்த ஆக்ரோஷத்தை வெளியில் காட்டாமல், வேகத்துடன், விவேகத்துடன் விளையாடி அணியை வழிநடத்தி வருகிறார், நாளை தனது 28 வயதை நிறைவு செய்யும் கோஹ்லி.

அனுஷ்கா கிடைக்க ஜாகிரே காரணம்

அனுஷ்கா கிடைக்க ஜாகிரே காரணம்

டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், `என்னுடைய வாழ்க்கையில் அனுஷ்கா சர்மாவின் வரவு மிகவும் முக்கியமான தருணமாகும். லேடி லக் அனுஷ்காவின் வரவால் என்னுடைய நடவடிக்கைகள் மாறின. அவர் எனக்கு கிடைப்பதற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் அளித்த ஆலோசனையே முக்கிய காரணமாகும்' என்று கோஹ்லி கூறியுள்ளார்.

ஆதரவாக இருந்தவர்

ஆதரவாக இருந்தவர்

2014ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் எனக்கு மிகவும் மோசமாக அமைந்தது. அப்போது எனக்கு ஆதரவாக இருந்து, என்னை தேற்றியவர் அனுஷ்கா. என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு அவர் மிகவும் ஆறுதலாக இருந்தார்.

மறைக்காமல் சொல்லிவிடு

மறைக்காமல் சொல்லிவிடு

அதற்கு முன், அனுஷ்காவுடன் என்னுடைய உறவு குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். ஆனால், ஜாகிர் கானிடம் என்னால் மறைக்க முடியவில்லை. அவரிடம் கூறியபோது, நீ என்ன தப்பும் செய்யவில்லையே. ஒரு பெண்ணுடன் பழகுவது தப்பில்லையே. அதை நீ மறைக்காதே. உடனடியாக சொல்லிவிடு என்று கூறினார். அதன் பிறகே, என்னுடைய காதலை, நட்பை அனுஷ்காவிடம் சொன்னேன் என்று விராட் கோஹ்லி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

பிறந்தநாளில் வாழ்த்துக்கள்

பிறந்தநாளில் வாழ்த்துக்கள்

நடிகர் முரளி போல் காதலை தனக்குள்ளேயே பூட்டி வைத்திருக்காமல் வெளிப்படையாக சொன்னதால், காதலும் கிடைத்தது. அதனால், கோஹ்லியின் வாழ்க்கையும் முன்னேற்றம் அடைந்தது. பிறந்த நாளில், அவர் நினைப்பது நடக்க கோஹ்லியை வாழ்த்துவோம்.

Story first published: Saturday, November 4, 2017, 18:10 [IST]
Other articles published on Nov 4, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற