கோஹ்லி வாழ்க்கையில் அனுஷ்கா சர்மாவை மட்டுமல்ல, ரோஹித் சர்மாவையும் மறக்க முடியாது!

Posted By:

கான்பூர்: கான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 113 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 211 பந்துகளில் 230 ரன்களை தேடிக்கொடுத்தது.

இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியதை அடுத்து கோஹ்லிக்கு சிறந்த பார்ட்னர் ரோஹித் சர்மாவா, அனுஸ்கா சர்மாவா என டிவிட்டரில் சுவாரசியமான விவாதம் எழுந்துள்ளது.

 மீண்டும் இணைந்த ரோஹித் , கோஹ்லி

மீண்டும் இணைந்த ரோஹித் , கோஹ்லி

நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 113 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர். முதலில் இறங்கிய தவான் 14 ரன்களுக்கு அவுட் ஆனதை அடுத்து ரோஹித்தும் கோஹ்லியும் ஜோடி சேர்ந்தார்கள். இவர்களை பிரிக்க நியூசிலாந்து முயற்சி செய்த அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாய்போனது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 211 பந்துகளில் 230 ரன்களை தேடிக்கொடுத்தது.

 பெஸ்ட் பார்ட்னர்ஷிப்

பெஸ்ட் பார்ட்னர்ஷிப்

இவர்களின் பார்ட்னர் ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. இவர்கள் இதற்கு முன்பே 4 போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் எடுத்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது இவர்கள் அடித்த 230 ரன்கள் தான் மிகவும் அதிகமான பார்ட்னர்ஷிப் ரன் ஆகும். சச்சின்- கங்குலி , கோஹ்லி- கம்பீர் , தரங்கா - ஜெயவர்த்தனே ஆகியோர்களின் பார்ட்னர்ஷிப் சாதனையை இதன் மூலம் இவர்கள் முறியடித்துள்ளனர்.

வைரல் ஆனா இணை

இந்த நிலையில் கோஹ்லிக்கு சிறந்த பார்ட்னர் ரோஹித் சர்மாவா, அனுஷ்கா சர்மாவா என டிவிட்டரில் சுவாரசியமான விவாதம் நேற்று நடந்தது. இவர்களின் பெயரை வைத்து எல்லோரும் கலாய்க்க ஆரம்பித்தனர். அதில் "கோஹ்லி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் போது ஒரு மந்திர வார்த்தை சொன்னால் போதும் அவர் சரியாகி விடுவார். அதுதான் 'சர்மா'. அனுஸ்கா சர்மா, ரோஹித் சர்மா ரெண்டுமே வேலை செய்யும்'' என்று கூறியிருக்கிறார்.

ரோஹித் சர்மா தான் பெஸ்ட்

இந்த நிலையில் ரோஹித், கோஹ்லி ஜோடி அடிக்கடி சிறந்து விளங்குவதாலும், அனுஷ்கா கோஹ்லி இடையே அடிக்கடி பிரச்சனை வருவதாலும் இந்த நபர் இப்படி எழுதி இருக்கிறார். அதில் "ரோஹித் சர்மா தான் கோஹ்லிக்கு நல்ல ஜோடி , கண்டிப்பா அனுஸ்கா சர்மா இல்லை" என்று எழுதி இருக்கிறார்.

அது அனுஷ்கா இல்ல ரோஹித்

இந்த நிலையில் இந்த நபர் எல்லாவற்றிற்கும் மேலே போய் வித்தியாசமாக ஒன்று எழுதி இருக்கிறார். அதில் "யாராவது கோஹ்லிக்கு நியாபகபடுத்துங்க, அங்க இருக்குறது அனுஸ்கா சர்மா இல்ல ரோஹித் சர்மா'' என்று காமெடியா எழுதி இருக்கிறார்.

Story first published: Monday, October 30, 2017, 12:54 [IST]
Other articles published on Oct 30, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற