அதுதான் கடைசி போட்டி.. சென்னை மைதானத்தில் டோணி இனி ஐபிஎல் விளையாடவே மாட்டாரா?

Posted By:

சென்னை: சென்னை மைதானத்தில் டோணி இனி ஐபிஎல் போட்டிகள் விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து டோணி 2020ம் வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2019ல் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிதான் அவர் கடைசியாக ஆட இருக்கும் ஐபிஎல் தொடர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் பல களேபரங்களுடன் கடைசியாக நடந்த ஐபிஎல் போட்டிதான் அவரின் கடைசி சென்னை போட்டி என்று கூறப்படுகிறது. இதனால் தலயின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

கிரிக்கெட் உலகக் கோப்பை

கிரிக்கெட் உலகக் கோப்பை

அடுத்த வருடம் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியை இந்த முறை இங்கிலாந்து அணி நடத்தும். மே மாதம் 30ம் தேதி தொடங்க இருக்கும் போட்டி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறும். இதற்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படும்.

அணியில் இருந்து விலகல்

அணியில் இருந்து விலகல்

இந்த நிலையில் 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்திய வீரர் டோணி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. 2019 உலகக் கோப்பை போட்டிதான் அவர் ஆட இருக்கும் கடைசி உலகக் கோப்பை போட்டி என்று கூறப்படுகிறது. சமயங்களில் அந்த தொடர் முடியும் போதே அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு

ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு

அதை தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ளது. அதுதான் அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் 2020 ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் .

சென்னை மைதானம்

சென்னை மைதானம்

இந்த வருடம் சென்னையில் இனி ஐபிஎல் போட்டி நடக்காது. 2019திலும் தேர்தல் காரணமாக இங்கு ஐபிஎல் கிடையாது. இதனால் அவர் கடைசியாக சென்னையில் ஆடிய ஐபிஎல் போட்டிதான், சேப்பாக்கம் மைதானத்தில் டோணி ஆடிய கடைசி ஐபிஎல் போட்டி என்று கூறப்படுகிறது. அவர் ஒருநாள் போட்டி ஓய்வுக்கு பின் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Sources say that Dhoni won't play IPL ever again in Chennai due to his retirement.
Story first published: Friday, April 13, 2018, 9:30 [IST]
Other articles published on Apr 13, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற