For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கடவுளே கடவுளே"... சச்சின் காலில் விழுந்த யுவராஜ் சிங்!

விசாகப்பட்டனம்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் யுவராஜ் சிங், மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்ததும் அவரிடம் சென்று காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

சச்சின் என்றால் பாசத்தைக் கொட்டும் வீரர்களில் யுவராஜும் ஒருவர். சச்சின் காலில் விழுந்து வணங்குவதை ஒரு சம்பிரதாயமாகவே மாற்றி விட்டார் யுவராஜ். எந்த இடத்திலும் சச்சினைப் பார்த்து விட்டால் படாரென காலில் விழுந்து விடுகிறார்.

விசாகப்பட்டனத்திலும் இதே சம்பவம் நேற்று நடந்தது.

தவான் அதிரடி

தவான் அதிரடி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. அதில் ஷிகர் தவான், வார்னர், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

காலில் விழுந்த யுவராஜ்

காலில் விழுந்த யுவராஜ்

போட்டி முடிந்ததும் இரு அணிகளின் வீரர்களும் பெவிலியன் திரும்பினர். அப்போது பவுண்டரி லைனில் நின்றபடி மும்பை வீரர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சச்சின். அவரைப் பார்த்த யுவராஜ் அருகில் சென்று டக்கென காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டார்.

வேடிக்கை பார்த்த கனே வில்லியம்சன்

வேடிக்கை பார்த்த கனே வில்லியம்சன்

யுவராஜுடன் வந்து கொண்டிருந்த ஹைதராபாத் வீரர் கனே வில்லியம்சன், யுவராஜ், சச்சின் காலில் விழுவதை நின்று வேடிக்கை பார்த்தார். சச்சினுக்குத்தான் ரொம்ப சங்கோஜமாகி விட்டது.

சங்கோஜத்தில் நெளிந்த சச்சின்

சங்கோஜத்தில் நெளிந்த சச்சின்

சங்கோஜத்தில் நெளிந்த சச்சின், வேகமாக யுவராஜைத் தடுத்து பிடித்து நிறுத்தினார். இப்போட்டியில் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 82 ரன்களைக் குவித்தார். யுவராஜ் சிங்கும் சிறப்பாக ஆடி 39 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 9, 2016, 12:43 [IST]
Other articles published on May 9, 2016
English summary
SRH player Yuvaraj Singh surprised the crowd once again by touching the feet of legendary Sachin Tendulkar after the match between MI and SRH.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X