லா லிகாவின் மிகவும் இளம்வீரர்... 15 வயதில் கால்பந்தாட்டத்தில் நுழைந்த லுகா ரொமேரோ

மாட்ரிட் : லா லிகா கால்பந்தாட்ட தொடரில் விளையாடிய வீரர்களில் மிகவும் இளம் வயதில் விளையாடியவர் என்ற பெருமையை லுகா ரொமேரோ என்ற வீரர் தட்டி சென்றுள்ளார்.

ரியல் மலோர்க்கா அணியில் இணைந்துள்ள ரொமேரோ 15 வயது மற்றும் 219 நாட்களில் தன்னுடைய முதல் போட்டியை ரியல் மாட்ரிட்டுக்கு எதிராக விளையாடியுள்ளார்.

81 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய 15 வயது 255 நாட்களில் லா லிகா போட்டிகளில் விளையாடிய பிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ் என்ற வீரரின் சாதனையை ரொமேரோ முறியடித்துள்ளார்.

இனி கால்பந்து மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு.. இங்கிலாந்து கால்பந்து அமைப்பு அதிரடி!

களமிறங்கிய இளம்வீரர்

களமிறங்கிய இளம்வீரர்

லா லிகா கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர்களில் மிகவும் இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற பெருமையை லுகா ரொமேரோ என்ற 15 வயது வீரர் தட்டி சென்றுள்ளார். கடந்த 81 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய 15 வயது 255 நாட்களில் லா லிகா போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்த பிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ் என்ற வீரரின் சாதனையை தற்போது ரொமேரோ முறியடித்துள்ளார்.

அன்டர் 15 அணியில் விளையாடியவர்

அன்டர் 15 அணியில் விளையாடியவர்

மெக்சிகோவில் பிறந்த ரொமேரோவின் குடும்பத்தினர் அர்ஜெண்டினாவில் வசித்து வருகின்றனர். முன்னதாக அர்ஜெண்டினா அணிக்காக அன்டர் 15 அணியில் இடம்பெற்று ரொமேரோ விளையாடி வந்தார். இடது கால் பந்தாட்ட வீரரான ரொமேரோ, ஸ்பானிஷ் மிட்பீல்டர் டேவிட் சில்வாவை போன்று விளையாடுவதாக மலோர்க்காவின் உதவி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

83வது நிமிடத்தில் ஆட்டம்

83வது நிமிடத்தில் ஆட்டம்

கடந்த 1ம் தேதி மலோர்க்காவின் சீனியர் அணியுடன் பயிற்சி மேற்கொண்ட ரொமேரோ, ரியல் மாட்ரிட்டுக்கு எதிரான நேற்றைய போட்டியின் 83வது நிமிடத்தில் களமிறங்கினார். இதனிடையே, போட்டிக்கு முன்னதாக ரொமேரோவை சாந்தப்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டதாக அணியின் பயிற்சியாளர் வின்சென்ட் மொரேனோ தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் விளக்கம்

தன்னுடைய கைகளை ரொமேரோவின் இதயத்தில் வைத்து தான் பார்த்ததாகவும், அது வழக்கத்திற்கு மாறாக வேகமாக துடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரொமேரோ மிகவும் சிறப்பான வீரர் என்றும் அதனால்தான் அவர் இந்த சிறிய வயதில் இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதாகவும் மொரேனோ மேலும் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
European Championship கணிப்புகள்
VS
English summary
I put my hand on his Heart and I could tell it was beating very fast -Coach
Story first published: Thursday, June 25, 2020, 10:31 [IST]
Other articles published on Jun 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X