சபாஷ் சதீஷ் சிவலிங்கம்.. காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

Written By: Bahanya

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.

போட்டியின் முதல்நாளான வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.

சஞ்ஜிதா சானு

சஞ்ஜிதா சானு

ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார். இரண்டாவது நாளான நேற்று பளுதூக்குதல் போட்டியின், 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.

தமிழக வீரர் அசத்தல்

தமிழக வீரர் அசத்தல்

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று 77 கிலோ ஆண்கள் பளுத்தூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

வேலூரைச் சேர்ந்தவர்

வேலூரைச் சேர்ந்தவர்

இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் இரண்டாவது இடத்தையும் அமெரிக்க வீரர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

தொடரும் பதக்க வேட்டை

தொடரும் பதக்க வேட்டை

இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க வேட்டை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுதவிர இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதங்கங்களையும் கைப்பற்றியுள்ளது.

English summary
Commanwealth India wins gold medal in weight lifting. Tamil Nadu player Sathish wins third gold medal for India.
Story first published: Saturday, April 7, 2018, 8:20 [IST]
Other articles published on Apr 7, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற