ஆசிய விளையாட்டு போட்டியில் தனியாக ஓடி தங்கம் வென்றார் சூரியா

By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: ஆசிய விளையாட்டு டெஸ்ட் போட்டிகளில், மகளிர் 5,000 மீட்டர் ஓட்டத்தில் இதியாவின் சூரியா லோகநாதன், தனியாக ஓடி தங்கம் வென்றார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தலாவில் ஆசிய டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. இதில் மூன்றாவது நாளான நேற்று இந்தியா பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் தங்கம் வென்றது.

Gold for Suriya

மகளிர் 5,000 மீட்டர் ஓட்டத்தில் மற்ற வீராங்கனைகள் யாரும் பங்கேற்காத நிலையில், சூரியா லோகநாதன் தனியாக பங்கேற்றா். அவர் இந்தத் தொலைவை 15 நிமிடங்கள் 39.18 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையான 15 நிமிடம் 46.92 விநாடிகள் என்ற சாதனையை அவர் முறியடித்தார்.

ஆடவர் 5000 மீட்டர் ஓட்டத்தில், தமிழகத்தின் கோவிந்தன் லட்சுமணன், தங்கம் வென்றார். அவர் 13 நிமிடங்கள் 56.30 விநாடிகளில் இந்தத் தொலைவைக் கடந்தார். ஜப்பானின் டகானோரி இச்சிகாவா 14 நிமிடங்கள் 19.10 விநாடிகளில் கடந்து வெள்ளி வென்றார்.

மகளிர் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் என்வி ஷீனா மற்றும் மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் ஆகியோரும் நேற்று தங்கம் வென்றனர். 18 வயதாகும் ஹிமா தாஸ், 23.59 விநாடிகளில் கடந்து தனது சொந்த சாதனையை உருவாக்கிக் கொண்டார்.

முன்னதாக இரண்டாவது நாளில், இந்தியா நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றது. மகளிர் 400 மீட்டர் தடையோட்டத்தில் சரிதாபென் கெய்க்வாட் தங்கம் வென்றார். ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கம் வென்றார். மகளிர், 1500 மீட்டர் ஓட்டத்தில் பி யு சித்ரா தங்கம் வென்றார். ஆடவர் 400 மீட்டர் தடையோட்டத்தில் எம்பி ஜபிர் தங்கமும், சந்தோஷ்குமார் தமிழரசன் வெள்ளியும் வென்றனர்.

போட்டியின் முதல் நாளில் இந்தியா இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் 3 வெண்கலம் வென்றது.


Story first published: Wednesday, February 14, 2018, 11:50 [IST]
Other articles published on Feb 14, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற