எட்டாவது தேசிய சாம்பியன்ஷிப் வென்று சென்னையின் சரத் கமல் சாதனை

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

ராஞ்சி: தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை எட்டாவது முறையாக வென்று, அதிக முறை பட்டம் வென்ற சாதனையை சமன் செய்தார் சென்னையைச் சேர்ந்த சரத் கமல்.

79வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூத்த வீரரான சரத் கமல் 4-1 என்ற செட்களில் ஆன்டனி அமல்ராஜை வென்றார்.

Sarath 8 time national champion

நடப்பு சாம்பியனான சரத்கமல் இதன் மூலம், எட்டாவது முறையாக தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முன்னாள் வீரர் கமலேஷ் மேத்தாவின் சாதனையை அவர் சமன் செய்தார்.

15 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக தேசிய சாம்பியனான சரத் கமல், ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் சாம்பியனானார்.


English summary
Sarath Kamal equals national record
Story first published: Wednesday, January 31, 2018, 15:42 [IST]
Other articles published on Jan 31, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற