For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்வியிலும் ஒரு சின்ன ஆறுதல்... அஸாருதீன் சாதனையை முந்தினார் டோணி

ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவிடம் பெரும் தோல்வியை இந்தியா வாங்கிக் கட்டிக் கொண்ட போதிலும், ஒரு சின்ன ஆறுதலாக முன்னாள் கேப்டன் அஸாருதீனினின் சாதனையை நேற்று கேப்டன் டோணி முந்தியது அமைந்தது.

அதாவது ஒரு கேப்டனாக அதிக அளவில் ரன்கள் குவித்த இந்திய வீரர் அஸாருதீன் என்ற சாதனையை டோணி நேற்று முறியடித்தார்.

நேற்று டோணிதான் சற்று ஆறுதல் தரும் வகையில் ஆடினார். அவர் 65 ரன்களை எடுத்தார். அவர் 27 ரன்கள் எடுத்த போது அஸாருதீன் சாதனையை தாண்டினார்.

152 போட்டிகளில் கேப்டன்

152 போட்டிகளில் கேப்டன்

32 வயதான டோணி, 152 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். மொத்தம் 5278 ரன்களையும் அவர் குவித்துள்ளார். இதற்கு முன்பு அஸாருதீன் 174 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 5239 ரன்களைக் குவித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

உலக அளவில் 5வது இடத்தில்

உலக அளவில் 5வது இடத்தில்

உலக அளவில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறார் டோணி. முதலிடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் இருக்கிறார். அவர் 230 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 8497 ரன்களைச் சேர்த்துள்ளார்.

3வது இடத்தில் கங்குலி

3வது இடத்தில் கங்குலி

இந்திய வீரர்களில் கங்குலி 3வது இடத்திலும், டிராவிட் 4வது இடத்திலும் உள்ளனர்.

சச்சினுக்கு 5வது இடம்

சச்சினுக்கு 5வது இடம்

சச்சின் டெண்டுல்கர் 5வது இடத்தில் இருக்கிறார். இவர் 73 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர். 2454 ரன்களைக் கேப்டனாக இருந்து எடுத்தவர்.

ராசியான கேப்டன் டோணி

ராசியான கேப்டன் டோணி

ஏற்கனவே இந்திய அணியின் ராசியான கேப்டனாக இருந்து வந்த அஸாருதீனை ஓவர்டேக் செய்து சாதனை படைத்தவர் டோணி என்பது நினைவிருக்கலாம். அஸாருக்குப் பிறகு இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளார் டோணி.

Story first published: Friday, December 6, 2013, 14:45 [IST]
Other articles published on Dec 6, 2013
English summary
MS Dhoni yesterday surpassed former batsman Mohammad Azharuddin as India's highest run scorer as captain in One Day Internationals. Dhoni, who made 65 in a losing cause for India against South Africa in the first ODI at Wanderers Stadium on Thursday (December 5), moved ahead of Azharuddin when he was on 27. India lost the match by 141 runs while chasing 359.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X