For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தன்னம்பிக்கையா எப்படி பௌலிங் செய்யறதுன்னு சொல்லி கொடுத்திருக்காரு... குல்தீப் யாதவ் நன்றி யாருக்கு?

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார் குல்தீப் யாதவ்.

இதற்கென சென்னையில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ள அவர், கவுதம் கம்பீர் தனக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

வலிமையை காட்டுகிறது.. பட்ஜெட்டுக்கு இடையே திடீரென இந்திய அணியை பாராட்டிய நிர்மலா.. என்ன சொன்னார்? வலிமையை காட்டுகிறது.. பட்ஜெட்டுக்கு இடையே திடீரென இந்திய அணியை பாராட்டிய நிர்மலா.. என்ன சொன்னார்?

எவ்வாறு தன்னம்பிக்கையுடன் பௌலிங் செய்வது என்பது குறித்து அவர் தனக்கு சிறப்பான அறிவுரைகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குவாரன்டைனில் குல்தீப்

குவாரன்டைனில் குல்தீப்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் வரும் 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறவுள்ளன. இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பௌலர் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார். அவர் தற்போது குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார்.

டெஸ்ட் தொடரில் குல்தீப்

டெஸ்ட் தொடரில் குல்தீப்

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இவர் ஒரு ஒருநாள் போட்டி மற்றும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருந்தார். முன்னதாக ஐபிஎல்லிலும் அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து தொடரில் இவர் இடபெற்றுள்ளார்.

கவுதம் கம்பீர் சிறப்பு

கவுதம் கம்பீர் சிறப்பு

இந்நிலையில் முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர் எப்போதுமே தன்னை சிறப்பாக வழிநடத்தி வருவதாக குல்தீப் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேகேஆர் வலைதளத்தில் பேசியுள்ள அவர், அனைத்து வகையிலும் அவர் தன்னை வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான வழிகாட்டுதல்

சிறப்பான வழிகாட்டுதல்

முன்னதாக சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தான் ஆடிய போதும் எவ்வாறு தன்னம்பிக்கை மிக்க வீரராக பௌலிங் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தான் எப்போதுமே கம்பீருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 1, 2021, 13:38 [IST]
Other articles published on Feb 1, 2021
English summary
Gambhir advised me what to bowl and how to become a confident player -Kuldeep Yadav
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X