ஐதராபாத் அணி எடுத்த அதிரடி முடிவு.. நடராஜனுக்கே வாய்ப்பில்லை.. ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றம்

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆடம் மைல்ன் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

என்ன தப்பு செய்தார்?.. நடராஜனை நீக்கிய வார்னர்.. பின்னணியில் என்ன நடந்தது - இதுதான் காரணம்!

ஆனால் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியில் 4 பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக வீரர் டி.நடராஜன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கம் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்கு சரியாக அமையவில்லை. இதுவரை விளையாடியுள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றியின் வாசல் வரை சென்று தோல்வியை தழுவியது. இதனால் இன்று மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் 3வது லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

பந்துவீச்சு

பந்துவீச்சு

இந்நிலையில் ப்ளேயிங் 11ல் 4 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரை விரிதிமான் சாஹா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஓப்பனிங்கில் வார்னர், பேர்ஸ்டோ ஜோடி களமிறங்கவுள்ளது. சஹாவுக்கு மாற்றாக மிடில் ஆர்டரில் இளம் வீரர் விராட் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல ஆல்ரவுண்ட ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக அபிஷேக் சர்மா சேர்க்கபப்ட்டுள்ளார்.

மணிஷ் பாண்டே

மணிஷ் பாண்டே

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சுலபமாக வெல்ல வேண்டிய சூழலில் தோல்வி முகத்தை பெற்றது. இந்த போட்டியில் பிட்ச்-ல் நன்றாக செட்டில் ஆகியிருந்த மணிஷ் பாண்டே மோசமான ஷாட்டால் அவுட்டானார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்குப் முக்கிய காரணமாக இது பார்க்கப்பட்டது. இதனால் மணிஷ் பாண்டே இந்த போட்டியில் வாய்ப்பு பெறமாட்டார் எனக்கூறப்பட்டது. ஆனால் டேவிட் வார்னர் அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

நடராஜன் இல்லை

நடராஜன் இல்லை

பவுலிங்கை பொறுத்தவரை தமிழக வீரர் நடராஜன் மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் இருவருமே 4 ஒவர் வீசிய நிலையில் நடராஜன் 32 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். அதே போல சபாஷ் நதீப் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். அவர்களுக்கு பதிலாக ஆஃப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான், கலில் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனார்.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

வார்னர், பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ரஷித் கான், புவேனேஷ்வர் குமார், முஜீப் உர் ரஹ்மான், கலீல் அஹ்மத்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Important changes in SRH against MI, T Nattarajan not in Playing 11
Story first published: Saturday, April 17, 2021, 19:48 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X