For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிங்கம் களமிறங்கிடிச்சி.. ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் தேதி இதுதான்.. அதுவும் மாஸான போட்டியிலாம்!

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. இதனால் இந்திய அணியின் பலம் இரட்டிப்பாகியுள்ளது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இதே நம்பிக்கையுடன் அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு தயாராகி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் பிப்ரவரி 9ம் நாக்பூர் மைதானத்தில் தொடங்கி மார்ச் 13ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்.. ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்.. ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு

 சீனியர்களுக்கு ஓய்வு

சீனியர்களுக்கு ஓய்வு

நியூசிலாந்து தொடருக்கு பின்னர் பணிச்சுமை காரணமாக ஓய்வில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு கம்பேக் தந்துள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்பிரித் பும்ராவின் நிலைமை தான் என்ன ஆனது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.

 நீண்ட ஓய்வு

நீண்ட ஓய்வு

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தின் போது முதுகில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்டார். கடந்த இலங்கை தொடரில் கம்பேக் தருகிறார் என அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் முதுகுவலி பிரச்சினை எனக்கூறி வெளியேறினார். ஆஸ்திரேலியாவுடனான போலவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவரின் பெயர் இடம் பெறவில்லை.

 பும்ரா ரிட்டர்ன்ஸ்

பும்ரா ரிட்டர்ன்ஸ்

இந்நிலையில் பும்ராவின் கம்பேக் குறித்து புது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதுகு வலியால் இத்தனை நாட்களாக உடற்பயிற்சிகளை மட்டுமே செய்துக்கொண்டிருந்த அவர், தற்போது பந்துவீச தொடங்கிவிட்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர வலைபயிற்சியை செய்துள்ளார். அப்போது அவருக்கு எந்தவொரு சிரமும் ஏற்படவில்லை எனக்கூறப்பட்டுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் தான் உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குகின்றன. எனவே இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதால் அதற்குள் ஜஸ்பிரித் பும்ரா நன்றாக தயாரகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, முழு ஃபார்முடன் களமிறக்கப்படுவார்.

Story first published: Thursday, February 2, 2023, 22:55 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
Team India star pacer Jasprit bumrah's Comeback update is out, NCA officials gives a new informations சிங்கம் களமிறங்கிடிச்சி.. ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் தேதி இதுதான்.. அதுவும் மாஸான போட்டியிலாம்!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X