For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாங்கடே வாங்க, ஐபிஎல் வெற்றியை கொண்டாடலாம்: ரசிகர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அழைப்பு

By Siva

மும்பை: ஐபிஎல் கோப்பையை வென்றதை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று மும்பையில் உள்ள வாங்கேட ஸ்டேடியத்தில் கொண்டாட உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மும்பை இந்தியன்ஸ் அணியினர் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெற்றது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைபற்றியது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது இது இரண்டாவது முறை ஆகும்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு பிரமாண்டமாக கொண்டாட உள்ளனர். இன்று இரவு 8 மணிக்கு வெற்றிக் கொண்டாட்டம் துவங்குகிறது.

சச்சின்

சச்சின்

வெற்றிக் கொண்டாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

வாங்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்டேடியத்திற்கான நுழைவுக் கட்டணம் இலவசம்.

மும்பை

மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணியினர் இன்று இரவு 7 மணிக்கு ஸ்டேடியத்திற்கு வந்துவிடுவார்கள். இது நீங்கள் பார்த்திராத வகையில் பிரமாண்டமாக இருக்கும் என்று அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 25, 2015, 15:13 [IST]
Other articles published on May 25, 2015
English summary
The Wankhede Stadium will open its gates this evening to all die-hard supporters of the Mumbai Indians as the team is all set for euphoric celebrations after its second triumph in the IPL T20 cricket tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X