For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

11 வருஷமா ஒரு ஐபிஎல் போட்டி விடாமல் ஆடிய ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு.. ரோஹித்துக்கு என்னாச்சு?

மும்பை : ஐபிஎல் தொடரில் சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஒரு போட்டியில் ஆடுவதில் இருந்து ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2019 ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது ரோஹித் சர்மாவிற்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

கோலி தான் பெஸ்ட்... விஸ்டன் சிறந்த வீரர்.. ஹாட்ரிக் அடித்து புதிய சாதனை கோலி தான் பெஸ்ட்... விஸ்டன் சிறந்த வீரர்.. ஹாட்ரிக் அடித்து புதிய சாதனை

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

ரோஹித் சர்மா காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு விட்டதாக கூறப்படுகிறது. எனினும், முன்னெச்சரிக்கையாக ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கீரான் பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

முதல் முறையாக ஓய்வு

முதல் முறையாக ஓய்வு

ரோஹித் சர்மா 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை ஒரு போட்டி விடாமல் ஐபிஎல் தொடரில் ஆடி வந்த ரோஹித் சர்மா முதல் முறையாக ஒரு போட்டியில் ஓய்வு எடுத்துள்ளார்.

கடைசியாக..

கடைசியாக..

2011க்கு முன்பு ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடி வந்தார். அப்போது 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு போட்டி விடாமல் ஐபிஎல் தொடரில் ஆடி வந்தார் ரோஹித்.

11 ஆண்டுகளுக்கு பின்

11 ஆண்டுகளுக்கு பின்

சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் இதுவரை 165 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் டெக்கான் அணிக்காக 32 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 133 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் ரோஹித் சர்மா.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

அதே போல ஒரே அணிக்காக தொடர்ந்து அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் இருக்கிறார். சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து 134 போட்டிகளில் ஆடியிருந்தார். ரோஹித் மும்பை அணிக்காக 133 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று, அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, April 10, 2019, 21:45 [IST]
Other articles published on Apr 10, 2019
English summary
MI vs KXIP IPL 2019 : Rohit Sharma missed an IPL match in 11 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X