விளையாடவே இல்லையே... ஆனாலும் அபராதம்....ரோகித் சர்மாவிற்கு புது நெருக்கடி!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

IPL2021: Mumbai Indians மெதுவாக பந்து வீசிய விவகாரம்.. Rohit Sharma-க்கு அபராதம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அதிகமாக ரன்களை குவிக்க முடியாமல் திணறியது.

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

இதையடுத்து இரண்டாவதாக ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

13வது போட்டி

13வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 13வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி 138 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இலக்காக கொடுத்தது.

சிறப்பான மிஸ்ரா

சிறப்பான மிஸ்ரா

நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பௌலிங் சிறப்பாக அமைந்ததற்கு முழு காரணமாக அமைந்திருந்தார் அமித் மிஸ்ரா. அவரது அபாரமான பௌலிங்கில் ரோகித், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் கீரன் பொல்லார்ட் என 4 விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து இழந்தது.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

மற்ற பௌலர்களும் சிறப்பாக பந்துவீசி அந்த அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடினர். ஷிகர் தவான் 45 ரன்களை எடுத்திருந்தார். தொடர்ந்து அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது.

ரோகித்திற்கு அபராதம்

ரோகித்திற்கு அபராதம்

இதனிடையே, நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறை என்பதால் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் அபராதம் கடுமையாக விதிக்கப்படும்.

கேப்டனாக அபராதம்

கேப்டனாக அபராதம்

நேற்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்சின்போது ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பை மேற்கொள்ளவில்லை. மாறாக கீரன் பொல்லார்ட் கேப்டனாக செயல்பட்டார். ஆயினும் கேப்டன் பதவியில் ரோகித் சர்மா உள்ளதால் அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit was the captain of Mumbai Indians on the team sheet so with a slow over-rate Rohit was fined Rs. 12 Lakh
Story first published: Wednesday, April 21, 2021, 10:23 [IST]
Other articles published on Apr 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X