For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘கலக்கத்தில் சிஎஸ்கே, டெல்லி’ கெத்தாக ப்ளே ஆஃப் வரும் மும்பை.. இன்னும் ஒரே ஒரு படி தான் தாண்டனும்!

அமீரகம்: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்னும் சுலபமான விஷயங்களையே செய்ய வேண்டும் என்பதால் மற்ற அணிகள் கலக்கத்தில் உள்ளன.

ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் விடாப்பிடியாக மோதி வருவதால், அடுத்தடுத்து ட்விஸ்ட் ஏற்பட்டு வருகிறது.

 வார்னர் இனி ஐபிஎல்-ல் இல்லை.. வெளிப்படையாக போட்ட ட்வீட்.. உண்மையை கூறிய அணி பயிற்சியாளர்! வார்னர் இனி ஐபிஎல்-ல் இல்லை.. வெளிப்படையாக போட்ட ட்வீட்.. உண்மையை கூறிய அணி பயிற்சியாளர்!

மும்பை அணி

மும்பை அணி

இந்த தொடரில் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை தான். 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற மும்பை அணி இந்தாண்டு சற்று சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் மும்பை அணியின் அச்சுறுத்தல் இல்லை என அனைத்து அணிகளும் நிம்மதியடைந்துள்ளன. என்னதான் மும்பை அணி முதல் சில ஆட்டங்களில் தோற்றாலும், மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது என்பது வரலாறாக உள்ளது.

அசத்தல் கம்பேக்

அசத்தல் கம்பேக்

அந்தவகையில் இந்தாண்டும் கம்பேக் கொடுப்பதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. 2வது பகுதியில் தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த மும்பை அணி நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாக இருக்கிறது.

ரன் ரேட் பிரச்னை

ரன் ரேட் பிரச்னை

புள்ளிப்பட்டியலை பொறுத்தவரையில் சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணியில் முதல் 3 இடங்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டன. 4வது இடத்திற்கு தான் தற்போது கடும் போட்டி உள்ளது. ஏனென்றால் கொல்கத்தா அணி மற்றும் மும்பை அணி இரண்டுமே இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் கேகேஆர் 4வது இடத்திலும், மும்பை 5வது இடத்திலும் உள்ளது.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

எனவே ரன் ரேட் அடிப்படையில் மும்பைக்கு கேகேஆர் அணி தலைவலியாக உள்ளது. கேகேஆர் ( +0.363 ) மற்றும் மும்பை ( -0.453 ). மும்பை அணிக்கு இன்னும் இந்த தொடரில் 3 லீக் போட்டிகள் மீதம் உள்ளன. எனவே இந்த 3 போட்டிகளிலுமே வெற்றியை பதிவு செய்துவிட்டால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதை உறுதிப்படுத்திவிடும். 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம். ஆனால் ரன் ரேட், கேகேஆர்-ஐ விட அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

அடுத்த போட்டிகள் விவரம்

அடுத்த போட்டிகள் விவரம்

மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக வரும் அக்டோபர் 2ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன் பிறகு அக்டோபர் 5ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இறுதியாக அக்டோபர் 8ம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. எனவே இந்த போட்டிகள் மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

Story first published: Wednesday, September 29, 2021, 18:02 [IST]
Other articles published on Sep 29, 2021
English summary
Mumbai Indians Chances for qualifying for IPL Playoffs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X